பாடசாலை மாணவி உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் தாயும் சகோதரியும்

பாடசாலை மாணவி உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் தாயும் சகோதரியும்

எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , மாணவியின் தாயும் சகோதரியும் பாத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்வாயில் நீராட சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று (03) மாலை எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்றுள்ளார்.

பாடசாலை மாணவி உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் தாயும் சகோதரியும் | Death Of A Schoolgirl Mother And Sister Critical

இதன்போது அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நிலையில் சிறுமியின் தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.