மர்மமான முறையில் உயிரிழப்பு ; கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

மர்மமான முறையில் உயிரிழப்பு ; கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய மருத்துவரே உயிரிழந்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழப்பு ; கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன? | Karapitiya Hospital Mysterious Death Doctor

அதேவேளை வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இளம் வைத்திய சடலமாக மீடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.