வெலிகம பிரதேசத்தில் பற்றி எரிந்த பாடசாலை

வெலிகம பிரதேசத்தில் பற்றி எரிந்த பாடசாலை

மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் இன்று  (03.03.2024) மாலை தீ பரவியுள்ளது.

தீ விபத்தின்போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வெலிகம பிரதேசத்தில் பற்றி எரிந்த பாடசாலை | School Fire In Weligama

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெலிகம பிரதேசத்தில் பற்றி எரிந்த பாடசாலை | School Fire In Weligama