அதிவேக சாலையில் மீண்டும் ஒரு கோர சம்பவம்: இருவர் வைத்தியசாலையில்!

அதிவேக சாலையில் மீண்டும் ஒரு கோர சம்பவம்: இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக சாலையில் மீண்டும் ஒரு கோர சம்பவம்: இருவர் வைத்தியசாலையில்! | Expressways Colombo Accident Last Night 2 Injuryஇச்சம்பவம் நேற்றிரவு (02-03-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அதிவேக சாலையில் மீண்டும் ஒரு கோர சம்பவம்: இருவர் வைத்தியசாலையில்! | Expressways Colombo Accident Last Night 2 Injury

கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.