உலகின் மிக ஏழ்மையான நாடு எது தெரியுமா..!
தொழிநுட்பம், பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் என உலகம் வேகமாக முன்னகர்ந்து சென்றுகொண்டிருக்கையில், அடிப்படை வசதிகள் இன்றி, ஏன் ஒரு வேளை உணவு கூட பெரும் போராட்டமாக இருக்குமளவுக்கு மிக ஏழ்மையான வாழ்வை மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளும் உலகில் இன்றளவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வரிசையில் உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது, இந்தநாட்டில் மக்கள் வாழும் சூழலைப் பார்த்தால் வறுமை எவ்வளவு தூரம் இங்கே தலைவிரித்துத் தாண்டவம் ஆடுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். வறுமையின் வலியைப் புரிந்து கொள்ள, புருண்டி நாட்டு மக்களின் வாழ்க்கை முறையைத் தான் நாம் பார்க்க வேண்டும்.
உலகின் ஏழ்மையான நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது, இந்தநாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியனாக உள்ள நிலையில், இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.
இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வறுமை வாட்டியெடுக்கும் வாழ்வை வாழ்கிறார்கள்.
காலணித்துவ ஆட்சியின்கீழ் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டு, பின்னர் இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, இங்கே பொருளாதார நிலை நன்றாக இருந்தது, காலவோட்டத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.
1996 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது, அன்று தொட்டு அந்நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து இன்று இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
இந்த நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டொலர்களாக மிக குறைந்த வருமானமாக அமைகிறது,தவிரவும் இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல் துன்பப்படும் அவலம் நேர்கிறது, நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை இங்கே காணப்படுகிறது.
புருண்டியைத் தவிர, மடகஸ்கார், சோமாலியா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் இன்றளவும் போராடி வருகின்றன, எண்ணற்ற இயற்கை வளங்கள் மண்ணுள்ளே பொதிந்து கிடக்க, வல்லரசு நாடுகளால் அவை சுரண்டப்பட்டு அந்த நாடுகள் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல, வளத்தை இழந்து வாழும் வழியையும் இழந்து வறுமை கோர தாண்டவம் ஆட இன்று வறுமையில் வாடும் இந்த நாட்டின் அவலம் அடுத்த சந்ததியையும் விடாமல் துரத்தும் படலமாக தொடரவுள்ளமை கண்முன் காணும் நிதர்சனமான உண்மை என்றால் அதில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை என்பதே உண்மை.