
அறநெறி பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக விசேட அறிவிப்பு!
கொரொனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு அறநெறி பாடசாலைக் கட்டிடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான வகுப்புகள் எதிர்வரும் ஒகஸ்ட் 16ஆம் திகதியும், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகள் ஒகஸ்ட் 23ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
சுகாதார அறிவுறுத்தல்களின் படி குறித்த அறநெறி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.