நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்!

நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்!

ஒரு கிலோ கிராம் நெல்லை  50 ரூபா எனும் நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதற்கு  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

சிறு போக நெல்லைக் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ்  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிதி பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அறுவடை செய்யப்பட்ட 2 இலட்சம் சிறு போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைய,  நிதி அரச வங்கி ஊடாக 10 ஆயிரத்து 400 மில்லியன் நெல் சந்தப்படுத்தல் அதிகாரசபைக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.