கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் இரு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் இரு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது!

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இரு தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 'கிரேக்க' சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் இரு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது! | Two Sri Lankan Tamils Arrested Katunayake Airport

மேலும் குறித்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் இரு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது! | Two Sri Lankan Tamils Arrested Katunayake Airport

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பாரிஸுக்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின்போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.