70 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

70 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்து 91 ஆயிரத்து 634 பேராக பதிவாகியுள்ளது. அத்துடன் கொவிட் 19 தொற்றால் இதுவரை 4 லட்சத்து 6 ஆயிரத்து 92 பேர் பலியாகியுள்ளனர். எனினும் சர்வதேச அளவில் கெரோனா வைரஸ் தொற்றில் இருந்து 34 லட்சத்து 55 ஆயிரத்து 99 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 7 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரையில், ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.