நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய அமெரிக்க தனியார் நிறுவனம்!

நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய அமெரிக்க தனியார் நிறுவனம்!

நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
 

அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான எஸ்ரோபோடிக் டெக்னொலஜிஸ் குறித்த விண்கலத்தை ஏவியிருந்தது.
 

இதன்மூலம்,நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
 

இதற்குமுன்னர் 1972ஆம் ஆண்டில் நிலவுக்கு அமெரிக்கா விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர், முதன்முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்று அமெரிக்காவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.