வெளிநாடொன்றில் இருந்து 13 இலங்கையர்கள் அதிரடியாக கைது

வெளிநாடொன்றில் இருந்து 13 இலங்கையர்கள் அதிரடியாக கைது

டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வெளிநாடொன்றில் இருந்து 13 இலங்கையர்கள் அதிரடியாக கைது | 13 Sri Lankans From A Foreign Country Arrested

கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, பொரளை பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.