16 வயது சிறுமியின் உயிரை பறித்த பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி! அதிர்ச்சி சம்பவம்

16 வயது சிறுமியின் உயிரை பறித்த பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி! அதிர்ச்சி சம்பவம்

பிரபல பாடகர் டேலர் ஸ்விஃப்டின் (Taylor Swift) இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சாலைப் பயணத்தினை மேற்கொண்ட போது பயங்கர கார் விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுமி டேலர் ஸ்விஃப்ட் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.16 வயது சிறுமியின் உயிரை பறித்த பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி! அதிர்ச்சி சம்பவம் | Taylor Swift Music Concert 16 Years Old Child Die

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

16 வயதான Mieka Pokarier என்ற சிறுமி தமது தாயார் மற்றும் சகோதரியுடன் கோல்ட் கோஸ்டிலிருந்து மெல்போர்னுக்கு தங்கள் காரில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (15-02-2024)  சுமார் 6 மணியளவில் Dubbo பகுதி அருகாமையில் சிறிய ரக சரக்கு லொறியுடன் இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

16 வயது சிறுமியின் உயிரை பறித்த பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி! அதிர்ச்சி சம்பவம் | Taylor Swift Music Concert 16 Years Old Child Die

இந்த விபத்தில் Mieka-வின் சகோதரி 10 வயதான Freya படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனம் ஓட்டிச் சென்ற Mieka-வின் தாயார் Kim Litchfield காயங்களுடன் மீட்கப்பட்டு Dubbo பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட Freya தற்போது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் கால் உடைந்த நிலையில் மூளையிலும் ஏற்பட்டுள்ள காயங்களால் கோமா நிலையில் உயிருக்கு போராடுவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமியின் உயிரை பறித்த பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி! அதிர்ச்சி சம்பவம் | Taylor Swift Music Concert 16 Years Old Child Die

காரின் முன் இருக்கையில், அமர்ந்திருந்த Mieka விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது அவர் டேலர் ஸ்விஃப்டின் All of the Girls You Loved Before என்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.