பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருடன் பிரதமர் விசேட சந்திப்பு!

பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருடன் பிரதமர் விசேட சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள  இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் ஆகியோருக்கிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுசுகாதார பரிசோதகர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு பிரதமருடனான கலந்துரையாடலில்   சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்த்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிடப்பபோவதில்லை எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் வௌியிட்டிருந்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த 17 ஆம் திகதி  முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடடிக்கை 10 ஆவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு இன்று கூடவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.