சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போதைப்பொருள் பாவனை தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருட்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதில் சமூகம் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களும், பாதுகாவலர்களும் சிறுவர்கள் முன்னிலையில் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Parents Attention Regarding Children

மேலும், போதைப்பொருட்களை சிறுவர்களின் பார்வையில் வைக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலை, மாதுராகொட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் போதைமாத்திரையை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலளிக்கும் போதே சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.