நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்

நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Electricity Consumers In Sri Lankaமின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.