சடுதியாக அதிகரித்தது பெரிய வெங்காயத்தின் விலை !

சடுதியாக அதிகரித்தது பெரிய வெங்காயத்தின் விலை !

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 330 ரூபாயாக இருந்த நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் தற்போது 400 ரூபாயை நெருங்கியுள்ளது.

அத்துடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களில் 420 ரூபாயாக பதிவாகியுள்ளது.