இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: 67 பலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: 67 பலஸ்தீனர்கள் பலி

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினால் பிடித்துச் செல்லப்பட்ட 02 பணயக் கைதிகளையும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

ரஃபா நகரில் சுமார் 15 லட்சம் அகதிகள் இருக்கின்ற நிலையில் ரஃபாவைத் தாக்கும் திட்டத்தை சர்வதேச சமூகம் எதிர்த்தாலும், இஸ்ரேல் திட்டமிட்டபடி செய்து வருகிறது.

இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: 67 பலஸ்தீனர்கள் பலி | Mohamed Washah Israel Alleges Al Jazeera Reporterஅதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரினால் இதுவரை 28000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.