ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்
அமெரிக்காவின் ஹவாய் தீவுப் புகுதிகளில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் தொடரபில், அந்நாட்டு புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, நிலநடுக்கத்தினால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
அத்துடன், சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.