போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்

போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.

கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதலாவது இரட்டை சதம் இதுவாகும்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆவார்.

அத்துடன், அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 382 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக, மொஹம்மட் நபி 136 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 148 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் ப்ரமோத் மதுஷான் 74 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.