கனடாவில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்

கனடாவில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்

கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்லவதாக தெரியவந்துள்ளது.

இந்த விவாகரத்துக்களின் காரணமாக ஆண்களை விடவும் பெண்களே பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, கனடாவில் சராசரியாக விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள் | Divorces On The Rise In Canada

இந்நிலையில், கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆனால், கடந்த மூன்று தசாப்த காலங்களாகவே 50 அல்லது அதனையும் விட அதிக வயதுடைய தம்பதியினர் மத்தியில் விவாகரத்துக்கள் பதிவாகும் சந்தர்ப்பம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.