கோமாவில் இருந்த 11 வயதான சிறுமியை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

கோமாவில் இருந்த 11 வயதான சிறுமியை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் கோமாவில் இருந்த சிறுமியொருவர், தாயின் நகைச்சுவையை கேட்டு சிரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா - மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமியொருவர் கடந்த 2017ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில் கோமாவிற்கு சென்றுள்ளார்.

கோமாவில் இருந்த 11 வயதான சிறுமியை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம் | Mother Doctors Comatose 11 Year Old Girl Smileவைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியை அவரது தாயார் பலரின் உதவியுடன் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், குறித்த சிறுமியின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை ஒன்றை கூறியுள்ளார்.

கோமாவில் இருந்த 11 வயதான சிறுமியை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம் | Mother Doctors Comatose 11 Year Old Girl Smileஇதனை கேட்ட குறித்த சிறுமி கண்ணை திறந்து சிரித்துள்ளார். இதனால், இன்ப அதிர்ச்சிக்குள்ளான தாய், குறித்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

எனினும், சிறுமி கண் திறந்தாலும் முழுமையாக குணமடையவில்லை எனவும் அவரை பேச வைப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.