லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
லிட்ரோ எரிவாயு விலை இந்த மாதத்தில் திருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றையதினம் எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.