சஃபாரி ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

சஃபாரி ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

யால மற்றும் பூந்தல ஆகிய சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் 2,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய கட்டண அதிகரிப்பு அமுலாகும் என சஃபாரி ஜீப் ரக வாகன சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 

இதன்படி நான்கு மணித்தியாலங்கள் சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்காக 15,000 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
 

நாள் ஒன்றுக்கான கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

எரிபொருள் செலவினம் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என சஃபாரி ஜீப் ரக வாகன சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.