சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கை மீன்பிடி படகுகள் மாலைத்தீவில் கைப்பற்றப்பட்டுள்ளன!

சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கை மீன்பிடி படகுகள் மாலைத்தீவில் கைப்பற்றப்பட்டுள்ளன!

மாலைத்தீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 25 ஆம் திகதியன்று மாலைத்தீவின் கடலோரக் காவல்படைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது ஒரு படகில் ஏழு பணியாளர்களும் மற்றைய படகில் ஆறு பணியாளர்களும் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது இந்த இரண்டு படகுகளும் மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பலான நூராதீனின் காவலில் ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இரண்டு மீன்பிடி படகுகளும் மாலே நகருக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.