மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு..!

மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு..!

ஐந்து நாட்களுக்குள் மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 54 வீதம் வரை குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21.1.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீன் விலை குறைந்ததால் மக்கள் காய்கறிகளை உண்பதில்லை அதனால் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் பணிபுரியும் விவசாயிகளின் வயல்களில் காரட் போன்ற விலை உயர்ந்த மரக்கறிகள் காணப்படுவதால் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு | Vegetable Price In Srilanaka Today

பொருளாதார மையத்தில் செயல்படும் ஒரு அமைப்பின் படி விலை நிர்ணயிக்கப்பட்டது, எந்த மாஃபியாவும் செயல்படவில்லை.

வெளிநாட்டில் இருந்து காய்கறிகளை கொண்டு வர அரசு வேலை செய்தால் முதலில் விவசாயிகள் பொருளாதார மைய அதிகாரிகள், தொழிலதிபர்கள், நாங்களும் சேர்ந்து தெருவில் இறங்குவோம்.

மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு | Vegetable Price In Srilanaka Today

வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையான பணியை எடுத்து அவர்களுக்கு இலக்கை நிர்ணயம் செய்து, அந்த இலக்குகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்பதை வட்டார அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விவசாயம் வளர்ச்சி அடையச் செய்யுமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, நுவரெலியா விவசாயிகளுக்கு வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமானதாகும்.

இதன் மூலம் விவசாய பொருளாதாரத்தை போட்டித்தன்மையுடன் வளர்க்க முடியும் என தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.