தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி

தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி

தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

களு கங்கையில் நீராடுவதற்காக சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி | Three Female Students Were Killed In Kalutara

சக மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர்களே இவ்வாறு நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.