மின் கட்டணம் ஒரு அலகிற்கு ஒரு ரூபாயே குறைப்பு?

மின் கட்டணம் ஒரு அலகிற்கு ஒரு ரூபாயே குறைப்பு?

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த யோசனை இன்று கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தகவலுக்காக இது பகிரங்கப்படுத்தப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய மின் கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் என மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய கருத்து வெளியிட்டார்.

"மிக எளிமையான கணக்கீட்டின் விளைவாக, சில விலைக் குறைப்புக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட விலையைப் பார்க்கும்போது, ​​நிலையான கட்டணங்கள் மற்றும் அலகு கட்டணங்கள் இரண்டும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் முடிவில், சில வேடிக்கையான உண்மைகள் உள்ளன. நிதி பரிவர்த்தனைகளை கையாளும் நிறுவனங்கள் தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கிறது.

மேலும், பொதுவாக மின்சார விலை குறைப்பு, ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாயே குறைக்கப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்றார்.