வரி அதிகரிப்பால் பொது கழிப்பறைகளுக்கான கட்டணத்திலும் மாற்றம்

வரி அதிகரிப்பால் பொது கழிப்பறைகளுக்கான கட்டணத்திலும் மாற்றம்

இலங்கையில் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம் 30.00 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வற் வரியுடன் சேர்த்து குடிநீர் கட்டணமும் அதிகரித்துள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் அரசாங்கம் வற் வரியை 18% ஆக உயர்த்தியுள்ளதுடன், இதன் காரணமாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.