வேலைவாய்ப்பிற்காக சென்ற இலங்கையர்களிடம் இலஞ்சம் கேட்டு அச்சுறுத்தும் பயங்கரவாதிகள்.
தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரில் பயங்கரவாத கும்பலொன்றின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி துறையில் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் தற்போது மியான்மரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சைபர் கிரிமினல் பகுதியில் உள்ள அடிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை கொடூரமாக ஒடுக்கி வரும் பயங்கரவாதிகள், அவர்களை விடுவிக்க ஒருவரிடம் 8000 டாலர்கள் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.