மயக்க நிலையில் மூன்று மகள்களுக்கு நடந்த கொடூரம்! தந்தை கைது

மயக்க நிலையில் மூன்று மகள்களுக்கு நடந்த கொடூரம்! தந்தை கைது

எகிப்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க சிகிச்சை அளிப்பதெனக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான வகையில் சடங்கு செய்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிந்து வாழும் அவர்களின் தாய் அளித்த புகாரின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்படுவதாகக் கூறி அந்த மூன்று சிறுமிகளுக்கும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு இந்தச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. தந்தைக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.