மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது நேற்று (2023.12.14) இரவு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of A Man Recovered In Batticaloa

இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.