பொலிஸார் மீது கத்திக்குத்து நடாத்தியவர் கைது

பொலிஸார் மீது கத்திக்குத்து நடாத்தியவர் கைது

கொழும்பு - பொரளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  கான்ஸ்டபிள்கள்  இருவரை  இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றவேளை   கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு  தப்பியோடிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிஸார் மீது கத்திக்குத்து நடாத்தியவர் கைது | The Man Who Stabbed The Police Was Arrested

சந்தேக நபரிடமிருந்து கூரான ஆயுதமும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.