படத்தை காட்டியவர்கள் கைது.

படத்தை காட்டியவர்கள் கைது.

குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படத்தை காட்டியவர்கள் கைது | The Person Who Showed The Picture Was Arrestedபண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள். மேலும் சந்தேகநபர்களால் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ரூ. 10,900 பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.