தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்காத காதலியால் விபரீத முடிவெடுத்த காதலன்!

தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்காத காதலியால் விபரீத முடிவெடுத்த காதலன்!

களுத்துறை - ஹோமாகம பிரதேசத்தில் காதலி தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான காதலன் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுபுஸ்ஸல்லாவ - கம்பஹாவத்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது காதலிக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்த போது காதலி பதிலளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்காத காதலியால் விபரீத முடிவெடுத்த காதலன்! | The Boyfriend Made A Perverse Decisionஇவர் தனது காதலியிடம் தான் உயிர்மாய்க்கப் போவதாக கூறி புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.