32 வயது இளைஞருடன் 15 வயது சிறுமி காதல்!

32 வயது இளைஞருடன் 15 வயது சிறுமி காதல்!

குருநாகலை, தோறயாய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 32 வயதுடைய இளைஞனுடன் காதல் வசப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு உரிய வயது வந்ததும் சிறுமியை திருமணம் செய்து தருவதாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

32 வயது இளைஞருடன் 15 வயது சிறுமி காதல்! | 15 Year Old Girl In Love With A 32 Year Old Manகுருநாகல், பிரியங்கரம பிரதேசத்தில் தனது மாமியுடன் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை, மாமி வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டினுள் நுழைந்து காதலன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி கூச்சலிட்டதையடுத்து அயலர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காதலனான இளைஞர் கைது செய்யப்பட்டு ,சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிரியங்கரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.