நமுனுகுலவில் நீராட சென்ற சிறுவன் பலி

நமுனுகுலவில் நீராட சென்ற சிறுவன் பலி

நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் நீராட சென்ற மூன்று பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மொனராகலை, அலியாவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

நமுனுகுலவில் நீராட சென்ற சிறுவன் பலி | A Boy Who Went Swimming In Namunukula Died

தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த சிறுவன், மேலும் இரண்டு இளைஞர்களுடன் குறித்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் இன்று முற்பகல் நீராடச் சென்றுள்ளார்.

அதன்போதே, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.