காலநிலை தொடர்பான அறிவிப்பு.

காலநிலை தொடர்பான அறிவிப்பு.

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

காலநிலை தொடர்பான அறிவிப்பு | Weather In Sri Lanka Todayமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.