பணமோசடியில் ஈடுபட்ட பெண் : நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை

பணமோசடியில் ஈடுபட்ட பெண் : நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை

வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (2023.12.09) நீர்கொழும்பு, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பணமோசடியில் ஈடுபட்ட பெண் : நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை | Proceedings To Appear Before The Magistrate Today

தென்கொரியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கந்தானை நாகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.