உணவு ஒவ்வாமையினால் 12 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 12 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மனையியல் பாட வேளையயில் செயன்முறை பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்களே திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா - மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையிலேயே மேற்படி சம்பம் பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும்12 மாணவர்களே திடீரென உடலில் அரிப்பு ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் காவல்துறையினர்,

உணவு ஒவ்வாமையினால் 12 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Food Allergic Reactions In Gampaha School Students

இந்நிலையில் மாணவர்கள் மீரிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

மேலும், இவர்கள் பாடசாலையில் மனையியல் பாட நேரத்தில் உணவொன்றை தயாரித்திருந்தனர், அதை உட்கொண்ட பின்னர் உடல் முழுவதும் அரிக்க ஆரம்பித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெவல்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.