கலா ஓயா நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு.

கலா ஓயா நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு.

கலா ஓயாவில் நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கலா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் - கெகிறாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவராவார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் தேடுதல் நடத்தப்பட்ட போது இவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கலா ஓயா நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு | Kala Oya Drowned Man Recovered As Dead Body

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.