பெற்றோரை ஏமாற்றிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.

பெற்றோரை ஏமாற்றிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.

பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருணாகல், பன்னல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள், பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

பெற்றோரை ஏமாற்றிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் | He Drowned While Going For A Swim Friendsஉயிரிழந்தவர்கள் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஹார கவிந்து நெத்மல் பீரிஸ் மற்றும் விஹங்க செனல் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் ஆவார்கள்.

மஹதெல்லவின் பாடசாலையின் மாணவர்களான இருவரும், பாடசாலை மைதானத்தில் விளையாட செல்வதாக கூறிவிட்டு இருவரும் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பம்புகுளிய பகுதியில் உள்ள ஏரி போன்ற நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருவரது ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சைக்கிள்களும் இருந்தன. மேலும் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் சடலங்களை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.