வாகன இறக்குமதிக்கு அனுமதி; வருமானத்தை குவித்த வெளிநாட்டு ஊழியர்கள்!

வாகன இறக்குமதிக்கு அனுமதி; வருமானத்தை குவித்த வெளிநாட்டு ஊழியர்கள்!

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதன்படி சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைக் கூறினார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி; வருமானத்தை குவித்த வெளிநாட்டு ஊழியர்கள்! | Permission To Import Vehiclesஇந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர்   குறிப்பிட்டார்.

எனினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேசமயம் திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.