அமெரிக்காவில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து : 12 பேர் பலி.
அமெரிக்காவின் ஹோண்டுராசில் 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், 2 பேர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தனர்.
இதேவெளை 20 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை படுகாயம் அடைந்தவர்கள் நோயாளர் காவுவண்டி மற்றும் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.