அரச வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு.

அரச வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு.

இலங்கையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05.12.2023) இடம்பெற்ற கல்விச் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான தொகை 466.276 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 517.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார்.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55 பில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இலங்கை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

அரச வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு | Government Staff Salary Teachers Vacancyநெருக்கடியான பொருளாதாரத்தின் மத்தியிலும் ஒரு நாடு என்ற வகையில் கல்வியை மேம்படுத்துவதற்கு இவ்வாறான கவனம் செலுத்துவது தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார்.