விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு.

இராணுவத்தில் கடமையாற்றும் இருவர் கம்பளையில் உள்ள தமது வீடுகளில் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

21 வயதான தெல்கே லசந்த பீரிஸ் கம்பளை, உனம்புவில் உள்ள தனது வீட்டிலும், 42 வயதான ஜயசிங்க தேவாலய, சந்திரபால பல்லே, தெல்தோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இராணுவத்தில் லான்ஸ் கோப்ரல்களாக பணியாற்றியவர்கள்.

இராணுவப் பொறியியலாளர்கள் பல்லேகல முகாமில் பணிபுரிந்த லசந்த பீரிஸ் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்களின் கடுமையான அழுத்தங்களை தாங்க முடியாமல் உயிரிழந்ததாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ.மதிவக்க முன்னிலையில் அவரது தாயும் தந்தையும் சாட்சியமளித்தனர்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Dayலசந்தவிடம் பணம் கேட்டு இராணுவ முகாமில் உள்ளவர்கள் அடிக்கடி வற்புறுத்தியதன் காரணமாக தங்கப் பொருட்கள் கூட அடகு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.                                                  

கடந்த மாதம் 23ஆம் திகதி தனது இருபத்தியோராம் பிறந்தநாளை அவரது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடியதோடு, மறுநாள் இராணுவ முகாமில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளின்படி, விருந்தொன்றை நடாத்தாதமை குறித்து கடுமையாகக் குற்றம் சாட்டி அச்சுறுத்தியதாக தாயார் வந்த தொலைபேசி இலக்கங்களை காட்டி  தெரிவித்தார்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Day

பலாத்காரமாக அவரிடம் பணம் பறித்தமை உள்ளிட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக கடந்த ஞாயிறு அன்று உனம்புவ வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட .நளின் மதிவாக்க, அங்கிருந்த இராணுவ காவல்துறையினரை எச்சரித்ததுடன், இவ்வாறான சம்பவங்கள் இராணுவத்தின் ஒழுக்க பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், சிறார்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு எனவும் தெரிவித்தார்.

பல்லே தெல்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த போது குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளை மேற்கொண்ட கலஹா காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுமுறையில் வந்த இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்த விபரீத முடிவு | Two Soldiers Committed Suicide On The Same Dayஇரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளார்.

மரண விசாரணையை அதிகாரி பி. ஜி. ஆரியரத்ன நடத்தினார் மற்றும் பிரேத பரிசோதனையை பேராதனை போதனா வைத்தியசாலை விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.பி.பி.சேனசிங்க அவர்களால் நடத்தப்பட்டது. இந்த இரண்டு மரணங்களும் கம்பளை காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன், ஒரே நாளில் ஒரே மாதிரியாக நடந்துள்ளது.