18 வயதில் பல்கலைக்கழக வாய்ப்பு: புதிய கல்வி சீர்த்திருத்தம்.

18 வயதில் பல்கலைக்கழக வாய்ப்பு: புதிய கல்வி சீர்த்திருத்தம்.

முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.

அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதில் பல்கலைக்கழக வாய்ப்பு: புதிய கல்வி சீர்த்திருத்தம் | Chance To Go University Sri Lanka Studentsஇந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் மாதம் பெப்ரவரி 19ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.