மின்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!

மின்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு  முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள  வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிண்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்! | Again The Electricity Bill Is Increasedமின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிண்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்! | Again The Electricity Bill Is Increasedநாட்டில் மின்சார உற்பத்திக்கான டீசல் போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இதுவரையிலும் நாட்டு மக்களுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.