பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட அசம்பாவிதம்: ஒருவர் உயிரிழப்பு

பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட அசம்பாவிதம்: ஒருவர் உயிரிழப்பு.

பொல்கஹவெல பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட அசம்பாவிதம்: ஒருவர் உயிரிழப்பு | Accident Trying To Get Off The Bus Person Diedஅலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவர் பொல்கஹவெல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

பின்னர் காயமடைந்தவரை பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட அசம்பாவிதம்: ஒருவர் உயிரிழப்பு | Accident Trying To Get Off The Bus Person Diedஇந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்கஹவெல - கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.