
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
கலேவெல பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை புலகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சோமதிலாவில் 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது குடும்பத்துடன் வயலில் விதை விதைத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக கலேவெல வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.