களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது 42) என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல் | Kidnapping Students Of Kelani University Securityகளனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இவர், நேற்று (2.12.2023) காலை பல்கலைக்கழக மைதானத்தில் அமைந்துள்ள விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த போது, மாணவர்கள் குழு ஒன்று அவரை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி பல்கலைக்கழகத்தின் உடல் நல மையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.